திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (10:48 IST)

இன்றே கடைசி... அரசு கொடுக்கும் ரூ.2,000 & 14 மளிகை பொருட்களை வாங்கியாச்சா?

மீதமுள்ள கொரோனா நிவாரணத் தொகையை இன்றைக்குள் வழங்க தமிழக அரசு மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயில் முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது. இதையடுத்து அடுத்த தவணையும் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையின் 2வது தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை இன்றைக்குள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றைக்குள் இவை வழங்கி முடிக்கப்படும் என தெரிகிறது.