ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்றும் நாளையும் 1200 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

buses
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து இன்றும் நாளையும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதேபோல் 17 மற்றும் 18ஆம் தேதி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளன 
 
இதனை அடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது