11ம் வகுப்பு மறுமதிப்பீட்டு பட்டியல்: 236 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்..!
11ம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதில் 236 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வு எழுதிய மாணவர்களில் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது
இதனை அடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இணையதளத்தில் முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த மறு கூட்டல் முடிவுகளில் 236 மாணவர்கள் மாணவர்களை மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva