1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (10:45 IST)

10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்க இருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு மார்ச் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டதால் 10ஆம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தற்போது ஜூன் 1-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியபோது ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் ஒரே ஒரு பதினோராம் வகுப்பு தேர்வு ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான பேருந்து வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் தற்போது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை தற்போது நடத்தக்கூடாது என்றும் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்றும் சென்னை வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னரே பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி நடைபெறுமா? என்பது தெரியவரும்