1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மனோதத்துவம்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (07:50 IST)

கணவன், மனைவி சேர்ந்து மது அருந்தினால் ஒற்றுமையாக இருப்பார்களாம்!

கணவன் மனைவி சேர்ந்து மது அருந்தினால் வாழ்வில் ஒற்றுமையாக இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு! 


 
குடி குடியை கெடுக்கும், கும்பத்தை சின்னாபின்னமாகும் , உடல் நலத்தை கெடுக்கும் என்றெல்லாம் வாசகங்களை வாசித்தும், காதால் கேட்டும் நாம் வளர்ந்திருக்கிறோம் ஆனால் அதற்கெல்லாம் விதி விலக்காக கணவன் மனைவி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அவர்கள் அலாதி பிரியத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பார்கள் என்கிறது ஓர் விசித்திர ஆய்வு.
 
அதாவது, கணவன் மனைவி உறவு குறித்த ஆய்வு ஒன்றில், ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் கணவன்- மனைவி ஆகியோர் மிகுந்த நெருக்கத்துடன் , பாசத்துடன் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து போவார்களாம்.
 
கேட்பதற்கு விநோதமாக உள்ள இந்த ஆய்வின் முடிவில் , குறிப்பிட்ட இடைவெளியில் அளவாக மது அருந்தும் பழக்கம் கொண்ட தம்பதிகள் கடைசி வரை ஒற்றுமையாக வாழ்வது தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் அளவுக்கதிகமாக மது குடிக்கும் தம்பதிகள் அடிக்கடி சண்டை போடுவது தெரிய வந்துள்ளது.


 
இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மதுப்பழக்கம் அல்லாதவராகவும் மற்றொருவர் மது அருந்துபவராகவும் இருந்தால் அவர்களுக்குள் சண்டை வர வாய்ப்புள்ளதாம். இது தான் நம்மவூரில் உள்ள பல குடும்பங்களில் நடக்கிறது.  
 
ஆனால் மதுவை கைவிட்ட தம்பதிகள் மிகுந்த புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வது குடும்ப வாழ்க்கைக்கும் , குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது . எனவே இப்பழக்கத்தை கைவிடுவது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் குடும்ப உறவுக்கும் நல்லது.