திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  3. முந்தைய தேர்தல் முடிவுகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (11:55 IST)

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்: ஒரு பார்வை

தமிழகத்தின் 15 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி 134 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
 
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி இரண்டாம் இடம் பெற்றது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 8 இடங்களைப் பெற்றது.
 
அதிமுக மொத்தம்  234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்றது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 89, (கூட்டணி-கட்சிகள் 8+1)  தொகுதிகளில் வென்றது.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் வைகோயின் மதிமுக தலைமையில், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி,தமிழ் மாநில காங்கிரஸ்  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்ற கூட்டணியை 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்படுத்தினர். இதில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிலைப்படுத்தினர். ஆனால் அந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
 
அதிமுகவைப் போலவே பாட்டாளி மக்கள் கட்சி 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது.ஆனால்,  1 தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை.