வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (18:26 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கடின உழைப்பை கண்டு அஞ்சாத எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்கள் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்:  சனிக்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.