ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 7, 16, 25

Sugapriya Prakash| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:06 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
கேதுவை நாதனாக கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
 
பரிகாரம்: ஸ்ரீராதா கிருஷ்ணரை வழிபடுவது நல்லது. 


இதில் மேலும் படிக்கவும் :