ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 1, 10, 19, 28

Sugapriya Prakash| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:55 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
சூரியனை நாதனாக கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் கிடைக்கும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். பொருளாதார வளம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
 
பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம்.


இதில் மேலும் படிக்கவும் :