வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாட்டத்தில் நவராத்திரி விழா...!!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜைகளை களைகட்டி வருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி கொண்டாட்டத்துக்கு பிரசித்தி பெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இங்கு நவராத்திரி, விஜயதசமியோடு பத்து நாட்களும் மிக விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
இதுபோல தமிழ்நாட்டில் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது, மைசூர், பெங்களூருவிலும் சிறப்பாக தசரா என்ற பெயரிலும் களை  கட்டி உள்ளது.
 
நவராத்திரி வந்து விட்டாலே அம்பிகையின் ஆலயங்களில் எல்லாம் ஆன்மிகம் மணக்கும் அளவு மாலையில், பூஜை,புனஸ்காரங்கள், பொங்கல், சுண்டல் நைவேத்யங்கள் என களைகட்டும்.
 
தமிழ்நாட்டில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மைசூர், பெங்களூருவிலும் சிறப்பாக தசரா என்ற பெயரில் களை கட்டி உள்ளது நவராத்திரி  கொண்டாட்டம்.
 
இறுதி நான்கு நாட்கள் துர்க்கா பூஜை செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. முருகனை கார்த்திகேயன் என்ற பெயரிலும் விநாயகர் லட்சுமி, சரஸ்வதியோடு சேர்த்து புடைசூழ இவர்களை வழிபடுகிறார்கள்.
 
தெலுங்கானா பகுதியில் பாதுகாம்மா என்று துர்க்கை அம்மனை அழைக்கிறார்கள். காஷ்மீரில் சாரிகை என்ற பெயரிலும், மைசூரில் சாமுண்டீஸ்வரி எனவும் துர்க்கை அம்மனை அழைப்பதுண்டு.
 
கொல்கத்தாவில் பந்தல்கள் அமைத்து துர்காவை ஊரெங்கும் வழிபடுகின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது.