1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தசை வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும் உணவுகள் என்ன...?

தசை வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும் முக்கிய உணவுப் பொருள் பாதாம். தினமும் 5 முதல் 8 பாதாம் சாப்பிட்டு வர தசை வளர்ச்சியை பெறலாம்.


பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு அதிக வலுவை தந்து தசை வளர்ச்சிக்கு உதவும்.
 
புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முக்கியமான உணவாக இருக்கும் முட்டையை, தினமும் ஒன்று அல்லது 2 சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கூடிய விரைவிலேயே தசை வளர்ச்சியை முட்டையைக் கொண்டு அதிகரிக்கலாம்.
 
புரதசத்தினை அதிகம் கொண்ட உணவான மீன், தசை வளர்ச்சியை உடனே அதிகரிக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து மீன் சாப்பிட்டு வருவதன் மூலம், கட்டுமஸ்தான உடலைப் பெறலாம். அத்துடன் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மீன் உதவும்.
 
மிக எளிமையான முறையில் தசை வளர்ச்சியை அதிகரிக்க சிக்கன் உதவும். தொடர்ந்து சிக்கன் சாப்பிட்டு வருவதன் மூலம், தசை வளர்ச்சியை உடனே பெறலாம். குறிப்பாக கோழியின் மார்பு பகுதி உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும்.
 
பட்டாணியில் உள்ள புரதசத்து உடலுக்கு அதிக பலத்தை கொடுக்கும். தசை வளர்ச்சிக்கு சிறந்த உணவான பட்டாணியை, மாலை நேரத்திலோ அல்லது இடைவேளைகளிலோ ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.
 
வெள்ளை அரிசியை விட, பழுப்பு அரிசி தான் தசை வளர்ச்சிக்கு ஏற்றது. இதில் உள்ள புரதசத்து, அமினோ அமிலங்கள் தசை வளர்ச்சிக்கு உதவும். எனவே தசை வளர்ச்சி விரைவில் பெற விரும்புபவர்கள், வெள்ளை அரிசியை தவிர்த்து பழுப்பு அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.