புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (18:20 IST)

நிம்மதியான உறக்கம் கிடைக்க தவிர்க்க வேண்டியவைகள் என்ன...?

தூங்கும் சமயத்தில் டீ, காபி, புகையிலை, சிகரெட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றை தவிர்ப்பது அல்லது அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிக்க நலம்.


வெறும் தரையில் படுத்து உறங்குதல் கூடாது. இதனால் படுக்கும் தரையைப் பொறுத்து நமது உடல் வெப்பநிலை பாதிக்கப்படும். இதற்கு துணி அல்லது பாயை போட்டு படுக்க வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன்னாள் நன்கு பற்களை துலக்கி விட்டுத் தூங்குவது நல்லது. மேலும் மனதிற்கு பிடித்த நல்ல பாடல்களை கேட்பதும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

நாம் தூங்கும் இடம் காற்றோட்டமாக இருப்பது அவசியம். அதாவது நல்ல சுத்தமான காற்று உள்ளே வந்து, நாம் சுவாசித்த காற்று வெளியே செல்லும் படியாக இருக்க வேண்டும். இதனால் அதிகப்படியான் பிரானவாயுவை நம் உடல் ஏற்றுக்கொண்டு நிம்மதியான உறக்கம் கிடைக்க வழி வகுக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிறு குளிப்பது நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும். தூங்குவதற்கு முன் சிறு மூச்சுபயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொண்டாலும் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே நாம் கைபேசிகளை அணைத்து விடவேண்டும். நமது தூக்கம் கெடுவதற்கு இதுவே முக்கியமான காரணம் ஆகும்.

காலை எழுந்தவுடன் நமது அன்றாட முதல் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு. நமது உடலில் உள்ள எல்லா இணைப்புகளுக்கும் பயிற்சி அளிப்பது என்பது அன்றைய தினத்தை சுவாரசியம் ஆக்கும்.