1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா...?

சிலபேர் சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இதனால் உள்ளேயே அடக்கி வைக்கும் போது நம் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகும். இன்னும் சிலரோ எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள். 
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசெளகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
 
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. இதனால் பைக்கில் பயணம்  மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால் சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின்  அது விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.
 
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள  நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை  ஏற்படுத்துவிடும்.
 
எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்கலில் சிறுநீர்  கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும்போது த்ண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
 
சிறுநீரை அடக்குவதால் தோலில் கொப்பளம் போட்டு அதன் மூலம் கழிவு வெளியேறத் துவங்கும். அதில் முக்கியமானது கரப்பான் என சொல்லப்படும் எக்சிமா. இது காலில் கொப்பளத்தை ஏற்படுத்தி, அரிக்கும். அதை சொறியும்போது அதில் இருந்து நீர் கசியும். அந்த நீர் பட்ட  இடத்தில் மீண்டும் கொப்பளம் வரும். முந்தைய கொப்பளம் வந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே சிறுநீர், மலத்தை அடக்காமல் இருப்பது  நலம் தரும்.