செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள்...?

பெருஞ்சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்கச் செய்வதில் பேருதவி புரிகிறது. எனவே நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது.

பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஈஸ்டோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி  மற்றும் இதர குறைபாடுகளை சரிசெய்கிறது.
 
பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.
 
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும். அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும்  நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.
 
பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய்கால வலி மற்றும் இதர  குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
 
பெருஞ்சீரகத்தில் மெக்னீசியம் சத்து அதிகம் நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட செய்கிறது. ஒரு சிலருக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் வியாதியையும் பெருஞ்சீரகம் குணப்படுத்துகிறது.