ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (17:11 IST)

தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் என்ன பயன்கள்...?

கொய்யா ஒரு சுவையான சத்தான பழமாகும். இது குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சத்தான பழமாகும்.


கொய்யா பழத்தில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை போக்குவதில் கொய்யா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொய்யாவில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது.