பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள்...?
பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது.
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும்.
பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.