வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வேலிபருத்தி இலை !!

பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிபருத்தி இலைசாற்றுடன் ஓரு தேக்கரண்டி தேன் கலந்து கொடுக்க மாதவிடாய் வயிற்று வலி சரியாகும்.

கால் வீக்கங்கள் மற்றும் உடம்பில் அடிப்பட்ட வீக்கங்களுக்கு வேலிபருத்தி இலையில் சாறு எடுத்து சிறிது சுண்ணாம்பு கலந்து பூசி வர அவை சரியாகும்.
 
வேலிபருத்தி இலையில் சாறு எடுத்து தேன் கலந்து அருந்திவர இருமல் குணமாகும். வேலிபருத்தி இலையை நன்கு மை போல் அரைத்து நகச்சுற்று, மற்றும்  கண்டமாலை இவைகளுக்கு பற்று போட அவை சரியாகும். உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் தடிப்புகளுக்கு வேலிபருத்தி இலை சாற்றை தடவ குணமாகும்.
 
உத்தாமணி இலையை வதக்கி துணியில் கட்டி ஓத்தடம் கொடுக்க கீல் வாதம், முடக்குவாதம், இடுப்புவலி முதலியன சரியாகும். உத்தாமணி வேரை பொடி செய்து  2 அல்லது 4 சிட்டிகை எடுத்து  பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க பேதியாகும். பூச்சி கிருமிகள் சாகும்.
 
வேலிபருத்தி இலை சாற்றில் மிளகை 7 முறை உறவைத்து காயவைத்து சிறிது பால் சேர்த்து உண்டு வந்தால் செரியாமை மந்தம் சரியாகும். உத்தாமணி வேர் 5  கிராம் எடுத்து அரைத்து பாலில் கொதிக்க வைத்து வடிகட்டி 3 நாள் காலை மட்டும் கொடுக்க நஞ்சுகடி, கரப்பான், பிடிப்பு முதலியன சரியாகும்.
 
வேலிபருத்தி நெஞ்சில் இருக்கின்ற கோழையை அகற்றுவதோடு புழுக்களை கொல்லும் தன்மையுடையது. வேலிபருத்தி இலையில் சாறு எடுத்து ஓரு தேக்கரண்டி அருந்திவர ஆஸ்துமா, பாம்புகடி சரியாகும். நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை கட்டிவந்தால் புண்கள் விரைவில் சரியாகும்.