திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (10:16 IST)

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் வசம்பு !!

Vasambu
வசம்பை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சூடு ஆறிய பின்பு குடித்து வந்தால் வாயு கோளாறுகள், பூச்சி தொல்லைகள், உப்பசம் மற்றும் அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.


வசம்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலன் தருகிறது.

குழந்தைகளுக்கு வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வசம்பை தேனுடன் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை குணமாகும்.

வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுதல் அல்லது படுக்கையை சுற்றி தூவி விடுவதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.