1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்!!

உணவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயத்தாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.  வெங்காயம் போலவே வெங்காயத் தாளிலும் கந்தகச்சத்து அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தாள் வெள்ளை,மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட  பல்வேறு வகைகளில் கிடைக்க கூடியது. இது குறைந்த கலோரியை கொண்டது. 
வெங்காயத்தாளில் வைட்டமீன் சி, வைட்டமீன் பி2, வைட்டமின் ஏ,கே மற்றும் தயமின் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன இதுமட்டுமின்றி மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,காப்பர்,மாங்கனீஸ் நார்ச்சத்துகள் மூலங்களாக உள்ளன.
 
வெங்காயத்தாள் கீரை வகையை சேர்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
 
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவருக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 
 
வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும். இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப்பூ பசியை தூண்டும்.
 
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் நீரில் கரையகூடியது. இது புற்றுநோய் ஏற்படுவதற்கான  வாய்ப்பைக் குறைக்கிறது.