செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (05:36 IST)

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் மஞ்சள் !!

மஞ்சளில் புரதம் , நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன.


மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், குடற் பூச்சிகள் போன்றவை நீங்கும்.

முகப்பருக்கள்,  கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது. பாலில் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் உடல் இரதம் சுத்தமாவதோடு இதய நோயை கட்டுப்படுத்துகிறது.

முட்டையும் ,மஞ்சளும் நல்ல சூடு பாலில் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு சளி, இருமல் விரைவில் குணமாகும்.

மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருள் இருப்பதால், இது எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து அதன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது.

மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

புண்கள் மீது மஞ்சளை தடவி வந்தால் இயற்கையான கிருமிநாசினியாக செயல்பட்டு, புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல் காத்து புண்களை வேகமாக ஆற்றுகிறது.