திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொசுவை முற்றிலும் விரட்டியடிக்க உதவும் டிப்ஸ் !!

கொசுவை இயற்கையான முறைகளில் மூலம் விரட்ட, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணியை வாங்கி, அரை மணி நேரம் புகைத்தால் போதும், கொசு வரவே வராது.

யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம்.
 
ஒரு மண் சட்டியில் பச்சை வேப்பிலை அல்லது நொச்சி இலை புகைக்க விட்டு அதன் மேல் மஞ்சள் பொடியை தூவிவிட்டால் கொசு தொல்லை முழுவதுமாக நீங்கி மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
 
புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சில கற்பூர வில்லைகளை போட்டு வைத்தால் கொசு எட்டிக்கூட பார்க்காது.
 
வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய்யைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய்  ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம்.