அவரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!
அவரைக்காயில் கனிசமான அளவு உடலுக்கு அவசிமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் தியாமின், வைட்டமின் கே, வைட்டமின் பி6, பொட்டாசியம், தாமிரம், செலினியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கனிசமான அளவு உள்ளது.
அவரைக்காய் தினமும் உணவில் சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் செல் நோய்கள் மற்றும் செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அவரைக்காயில் மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற தத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் இழப்பைத் தடுக்கிறது.
அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமாகும். இது இரத்த சிவப்பணுக்கள் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.
மேலும் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகளாகும். எனவே, அவரைக்காய் தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வது இரத்த சோகை அறிகுறிகளை எதிர்த்து இரத்தத்தில் இரும்பு அளவை அதிகரிக்கிறது.
அவரைக்காய் தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.