1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பெருங்காயம் !!

சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


பெண்களுக்கு  மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் சூதகவாய்வுகளில் இருந்து நிவாரணம்  கிடைக்கும்.
 
பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.
 
பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.
 
வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து பருகினால் வயிறு தொடர்பான  பிரச்சைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.
 
இஞ்சி தூள், கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து பருகினால் வாயு தொல்லை நீங்கும். 2 கிராம் பெருங்காயத்தை 20 மிலி  நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு துளி அளவு காதில் விட காதுவலி குணமாகும்.
 
தேள் கொட்டு சரியாக பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து கொட்டிய இடத்தில் பூச வேண்டும். குடலின் இயக்கத்தை அதிகமாக்க, நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயம் வயிற்றின் மீது தடவப்படுகின்றது.
 
ஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்து அதில் சில துளி கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தொப்புளில் தடவி சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.