திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (15:19 IST)

கழுத்து வலியை போக்க உதவும் சில எளிய பயிற்சி முறைகள் !!

Neck Pain
இன்றைக்கு இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் கழுத்து வலியால் பலர் அவதிப்படுகின்றனர். இதற்கு  தவறான முறையில் அமர்வது முக்கிய காரணமாக இருக்கிறது .அதனால் இந்த கழுத்து வலிக்கு செலவில்லாமல் வீட்டிலேயே நாம் செய்ய கூடிய எளிய பயிற்சிகளை பற்றி பார்க்கலாம்.


பயிற்சி 1: நேராக நின்று கொண்டு, கைகளை தலைக்கு மேல் வைக்கவும். இப்போது கழுத்தை வளைக்காமல், மெதுவாக வலது பக்கம் வளைக்கவும். அதன் பிறகு, இயல்பு நிலைக்கு திரும்பவும். பின் இடது பக்கம் குனிந்து 10 முறை செய்யவும். இதன் மூலம், கழுத்து வலியிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம்.

பயிற்சி 2: முதலில் நேராக நிற்க வேண்டும், அதன் பிறகு கழுத்தை முன்னோக்கி குனிந்து, பின்புறத்தை நோக்கி கழுத்தை உள்ளே இழுக்க வேண்டும். இதற்குப் பிறகு, 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்து 10 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கழுத்து வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

பயிற்சி 3: முதலில் நேராக நிற்க வேண்டும், அதன் பிறகு முதலில் கழுத்தை இடதுபுறமாக சாய்த்து, பின்னர் அதே வழியில் வலதுபுறமாக சாய்க்கவும். இந்த பயிற்சியை 5 முதல் 8 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கழுத்து, தோள்பட்டை வலியில் இருந்து விடுபடலாம்.

தோள்களுக்கான பயிற்சி 4: நேராக நின்று தோள்களையும் கழுத்தையும் நேராக வைத்திருங்கள். இதற்குப் பிறகு, தோள்களை வட்ட இயக்கத்தில் இயக்கவும். இதனை நீங்கள் 5 முதல் 8 முறை மீண்டும் செய்ய வேண்டும்.