1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 11 மே 2022 (14:03 IST)

மிக எளிதாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

Drumstick Spinach
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது.


இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.

முருங்கைக்காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை சாப்பிடுவதால் சிறுநீரகம் பலப்படும். தாதுவும் பெருகும். எனவேதான் இக்கீரைக்கு விந்து கட்டி என்ற பெயரும் இருக்கிறது.

முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சீகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டுப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகல் நீங்கும்.

கடுமையான ரத்த சீதபேதி, வியிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்தாகும். முருங்கைக்கீரையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.