1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இதை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது ஏன்...?

ஒருவரது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணம் டயட். இன்றுநாம் சாப்பிடும் பல உணவுகள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வகையில் உள்ளன. எனவே  ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயமானது மிகவும் சிரமப்பட்டு இரத்தத்தை அழுத்தும். இப்படியே நீண்ட நாட்கள் இதயம் கஷ்டப்பட்டு இரத்தத்தை உறுப்புக்களுக்கு அழுத்தத்தினால், இதயம் அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பாதிக்கப்பட்டு, இதய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டியிருக்கும்.
 
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை உண்டாக்கும். குறிப்பாக சிப்ஸ், ஊறுகாய், வேர்க்கடலை, பாப்கார்ன், உறைய  வைக்கப்பட்ட கலவைகள், கெட்சப், ட்ரெசிங், சூப் மிக்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 
கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை உட்கொள்பவர்களை விட, சைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
ஆல்கஹாலை எடுத்து கொள்ளும்போது அது இரத்த அழுத்த அளவை தற்காலிகமாக சட்டென்று உயர்த்தும். காபியில் உள்ள காப்ஃபைன், தற்காலிகமாக இரத்த  அழுத்தத்தை அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்தம் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது.
 
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த குழாய்களில் கொழுப்புக்களைப் படிய வைத்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் அதிகரித்தால், அது உடல் பருமனை அதிகரிக்கும்.