புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ஆரஞ்சு தோலை வைத்து சரும பராமரிப்பு செய்யும் வழிகள்...!

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து உங்கள் தினசரி சருமப் பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும். வைட்டமின் சி தவிர ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக் கூட்டி வெண்மையாக்கும் சருமப் பராமரிப்பு பூச்சுகளில் மற்றும் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம்.
உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும். இந்த ஆரஞ்சுத் தோலைக் கொண்டு உங்கள் தினசரி சருமப்  பராமரிப்பை எப்படி செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
 
ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். இதை  தினமும் சிறிதளவு பாலுடன் சேர்த்து பூசி வந்தால் அப்பழுக்கற்ற சருமம் பெற முடியும். தேவைப்பட்டால் இந்த கலவையைக் கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து  முகத்தில் மசாஜ் செய்யலாம்.
 
ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள்  சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. ஆரஞ்சுத் தோலைக் கொஞ்சம் எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கப் தயிரில்  கலந்து உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
 
ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள்  ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும்.