உடல் வலியிலிருந்து நிவாரணம் தர உதவும் ஆலிவ் ஆயில் !!
சில எண்ணெய்களின் உதவியுடன், எலும்புகளை வலுவாக்குவதுடன் அதன் வலியையும் போக்கலாம்.
கடுகு எண்ணெய் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலை வலுவாக்குவது மட்டுமின்றி, மூட்டு வலிக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய்யைக் கொண்டு உடலை மசாஜ் செய்யலாம்.
பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய் எலும்புகளை வலுப்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, பாதாம் எண்ணெயைக் கொண்டு உடலையும் மசாஜ் செய்யலாம்.
நல்லெண்ணெய்: எலும்புகள் வலுப்பெற, நல்லெண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலும் சருமமும் மிகவும் அழகாக மாறும்.
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயும் மற்ற எண்ணெய்களைப் போலவே எலும்பை வலுப்படுத்தும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உடல் வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். அதாவது, இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் உடலையும் மசாஜ் செய்யலாம்.
ஆலிவ் ஆயிலை உபயோகித்தால் நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இதில் உள்ள ஒலெயூரோபின் சத்துக்கு நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது.