புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:47 IST)

திராட்சையில் உள்ள சத்துக்களும் அதன் பலன்களும் !!

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சை பழத்தை சாப்பிட வேண்டும். அது நன்றாக பசியை தூண்டிவிடும். மேலும் குடல் கோளாறுகளை சரி செய்யும்.


திராட்சைபழ சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர நாவறட்சி நீங்கும். உலர்ந்ததிராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்துபருகினால் மயக்கம் குணமாகும்.

பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும், உடல் அசதிக்கும் திராட்சை நல்ல பலனை கொடுக்கும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுவோருக்கு திராட்சை அருமையான மருந்து.

இரத்த சோகை, மலசிக்கல், சிறுநீரககோளாறு, அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் சக்தி திராட்சை பழத்திற்கு உண்டு.

திராட்சைபழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும், இரத்தம் தூய்மை பெரும், இதயம், கல்லீரல், மூளை , நரம்புகள் வலுப்பெறும்.

திராட்சைபழத்தை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும். உடல் எடையும் கணிசமாக அதிகரிக்கும். எனவே மெலிந்த  உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.