வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (13:48 IST)

பப்பாளி சாப்பிடும் முன் இதை கவனிப்பது அவசியம்!

Papaya
விலை மலிவாகவும் அதிக ஊட்டச்சத்துகளையும் தரும் பழம் பப்பாளி. பப்பாளி உடலுக்கு நல்லதுதான் என்றாலும் சிலருக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


 
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
எலுமிச்சையும், பப்பாளியும் சேர்ந்து நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
பப்பாளி நன்மை பயக்கும் என்றாலும் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும்.
பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் இருப்பதால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வீக்கம், தலைசுற்றல், தலைவலி, சொறி போன்ற அலர்ஜிகள் ஏற்படும்.
பழத்தின் தோலில் லேடெக்ஸ் உள்ளது. இது வயிற்றில் எரிச்சல் மற்றும் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
புளித்த பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.
பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தின் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
மற்ற அனைத்து நார்ச்சத்துள்ள பழங்களைப் போலவே பப்பாளியும் அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கை மோசமாக்கும்.