1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (11:15 IST)

சிறுநீர் தடை போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் நாயுருவி !!

காய்ச்சலுக்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும். மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.


நாயுருவி இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும். மேலும் நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது. நாயுருவி வேரை உலரவைத்து பொடித்து சலித்து வைத்து இந்த பொடியை கொண்டு பல் துலக்கிவந்தால் பற்கள் பளபளவென மின்னும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.  சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல், சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீர் தடை போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் நாயுருவி சமுல விழுதை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து பாலுடன் கலந்து குடிக்க வேண்டும். 5 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீர் வராமல் சிறுநீர் கடுப்பு இருந்தால் நாயுருவி கதிர்விடாத இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து அதன் சம அளவில் தண்ணீர் கலந்து மூன்று வேளை 3 மில்லி வரை சாப்பிட வேண்டும். இதை குடித்த பிறகு பால் குடிக்க வேண்டும். இதனால் தடைபட்ட சிறுநீர் வெளிவரும். உடம்பில் இருக்கும் நச்சுநீர் வெளியேறும்.

Edited by Sasikala