வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும்.
 

வீட்டில் அடிக்கடி செய்யும் பீன்ஸ் பொரியலை உட்கொண்டு வந்தாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் பீன்ஸில் உடல்  எடையைக் குறைக்கும் திறன் உள்ளது.
 
புதினா உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுவதோடு, உடலை அமைதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, புதினா வாய் துர்நாற்றத்தையும்  தடுக்கும்.
 
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, தொப்பையும் வருகிறது. எனவே அதற்கு பதிலாக  மாட்டுப் பாலை குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பிட்டாகவும் இருக்கும்.
 
இறைச்சிகளை உட்கொள்வதற்கு பதிலாக, மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைப்பதுடன், அதில்  கொழுப்புக்களும் குறைவாக உள்ளது.