ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவகுணம் நிறைந்த அவுரி எனப்படும் நீலி

அவுரி எனப்படும் நீலி இலைகள் சாயம் மட்டும் தருவதல்லா. மிகச் சிறந்த மீலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் மிக சிரந்த மலமிளக்கி. 18 வகை விஷங்களை நீக்கும் வல்லமை பெற்றது.
முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் தைலங்களில், கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை. கப, வாத நோய்களைத் தீர்க்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், மண்ணீரல்  நோய்களை நீக்கும். உடல்எடை குறைதல் பிரச்னை தீர, அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருக வேண்டும்.
 
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உல்ல மூலிகை அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்களால் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.
 
பல்லில் உள்ள கிருமிக்கு, நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும். கடைகளில் விற்கப்படும், நீலி பிருங்காதி தைலம், நீலின் யாதி கிருதம், நீலி காதி தைலம் ஆகியவற்றில், இதன் பயன்பாடு அதிகம். தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க, அவுரி பயன்படும். 
வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும். அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இதனை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளும் விலகும். காலை, மாலை வேளைகளில், 45 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.