இஞ்சியின் மருத்துவ குணங்களும் பலன்களும் !!
ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உட்கொண்டால், சளி மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் அடையலாம்.
தொண்டை மற்றும் மூக்கில் ஏற்படக்கூடிய நெரிசலை போக்க இஞ்சி தேநீர் பயன்படுகிறது. செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வது பித்தப்பை பித்தத்தை வெளிப்படுத்த மற்றும் செரிமானத்தை தூண்டி விட உதவும்.
இஞ்சியை கொண்டு தேநீர் தயாரித்தோ அல்லது இஞ்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளையோ உட்கொள்ளலாம்.
இரத்த குழாய்களில் அழற்சி மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடிய புரோஸ்கிளாண்டைனை தடுப்பதன் மூலம், மைக்ரைன் எனும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க இஞ்சி உதவுகிறது.
பல விதமான புற்றுநோய் செல்களை அதாவது நுரையீரல், கருப்பை, புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இஞ்சியில் நிறைந்து உள்ளது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் இஞ்சியை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது பெரும் நன்மை பயக்கும்.
சருமத்தின் மீது இஞ்சி சாறை தடவுவது தோலில் ஏற்பட்டுள்ள எரிச்சலை குறைத்து, எரிந்து போன சருமத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவுகிறது. தோலில் காணப்படும் தழும்புகள் மீது புதிய இஞ்சி துண்டினை தேய்த்து வந்தால், அது 6 முதல் 12 வாரங்களுக்குள் தழும்புகளை மறைக்க உதவும்.