1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மஞ்சள் காமாலையில் இருந்து குணம்தரும் மருத்துவ குறிப்புகள் !!

மஞ்சள் காமாலை அல்லது ஹெபடைடிஸ் பி ஆகியவை கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளாகும். இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல்,  வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கண்களில் இருக்கும் வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சிறுநீரும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. 

எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். தகுந்த மருத்துகளை முறையான முறையில் சாப்பிட்டு வருவதால் நல்ல நிவாரணம்  பெறமுடியும்.
 
வேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இது வைரஸை எதிர்த்து போராடும் தன்மை கொண்டுள்ளது. மேலும் வேப்பிலை கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
 
பயன்படுத்தும் முறை: வேப்பிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி, மிக்ஸியில் போட்டு 30மிலி ஜூஸாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாதியளவு தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.
 
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகளவில் உள்ளது. இது கல்லீரல் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகுவதால் மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்கலாம்.
 
உங்களுக்கு நெல்லிக்காய் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதிலும் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி  கல்லீரலை பாதுகாப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் எலுமிச்சை ஜூஸையும் பருகலாம்.
 
தக்காளி கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. புதிய தக்காளி ஜூஸை காலையில் ஒரு டம்ளர் அளவு வெறும் வயிற்றில் குடிப்பது மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 
முள்ளங்கி கல்லீரலில் ஏற்படும் சேதம் மற்றும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. முள்ளங்கியின் மேல் இருக்கும் இலைகளை சுத்தமாக கழுவி, அதனை ஜூஸ் செய்து தினமும் ஒருமுறை குடித்தால் பத்து நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.