வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 4 டிசம்பர் 2021 (09:41 IST)

எல்லா இடங்களிலும் கிடைக்கும் துளசியில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

துளசி இலைகளை தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்கும்.

தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும். தினமும் காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் கேன்சர் குணமாகும்.
 
துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும்.
 
துளசி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும்.
 
பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
 
துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.