புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (14:50 IST)

எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் எலுமிச்சை பழம் !!

எலுமிச்சையில் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை, மலை எலுமிச்சை, காட்டு எலுமிச்சை எனப் பலவகைகள் உண்டு. இதில் காட்டு எலுமிச்சை அதிக மருத்துவ குணங்கள் நிரம்பியது.


காட்டு எலுமிச்சையில் மற்ற எலுமிச்சை வகைகளை விட அதிக சிட்ரஸ் அமிலம் நிறைந்துள்ளது.
 
ஒரு கப் சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, பிழிந்து சாறக்கி கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.
 
கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலப்படும்.
 
எலுமிச்சம் பழ சாற்றில் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும், ஒரு தேக்கரண்டி மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து, காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
 
எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கி உடல் நறுமணத்துடன் புத்துணர்வு பெறும். எலுமிச்சை பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.
 
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உடையவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம். இது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை குணமாக்கும்.
 
பெண்கள் மாத மாதம் ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையால் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். அந்த சமயங்களில் அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் எலுமிச்சை கொண்டு செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களை எடுத்து கொண்டால் மாதவிலக்கின் போது உண்டாகும் வலி குறையும்.