வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 28 மே 2022 (17:20 IST)

உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் அற்புத மூலிகை கீழாநெல்லி !!

Keezhanelli
கீழாநெல்லி செடி சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும். இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என அழைக்கபட்டது. பின்னர் பேச்சு வழக்கில் கீழாநெல்லி என அழைக்கபடுகிறது.


சிலருக்கு இளம் வயதிலேயே முடி கொட்டி தலையில் வழுக்கை விழும். அப்படியானவர்கள் வழுக்கை தலையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடிகள் உருவாகும்.

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

நாள்பட்ட நீர் கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து 1 வாரத்திற்கு இரண்டு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடனே சரியாகி விடும்.

கீழாநெல்லி இலை சிறிது எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.