1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (11:25 IST)

இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்ததா விளாம்பழம்....?

சர்க்கரையுடன் விளாம்பழத்தை பிசைந்து ஜாம் போல் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசி எடுக்கும். மேலும், ஒவ்வாமையால் ஏற்படுகின்ற நோய்கள் குணமாகும்.

பித்தத்தால் ஏற்படுகின்ற தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பு, அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் ருசியின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யக்கூடியது விளாம்பழம்.
 
விளாமர பட்டையை பொடி செய்து அந்த பொடியை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயத்தை வடிகட்டி குடித்து வந்தால், வறட்டு இருமல், வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
 
விளாம்பழத்துடன் பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் மற்றும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை குணமாகும்.
 
விளாம்பழத்துடன் பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து இருபத்தி ஒரு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.