திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்...!

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும்.
 
* குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
 
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
 
* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.
 
* ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும் புடலங்காய் விந்துவை கெட்டி படுத்தும். புடலங்காய் சாப்பிடுவதால் காம உணர்வு அதிகரிக்கும். உடல்  தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
 
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
 
* காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்‌ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத்  தொடங்கும்.
 
* காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்‌ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத்  தொடங்கும்.
 
* கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.