1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்...!!

முடக்கத்தான் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி, மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. முடக்கத்தான் இலை, வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களை கொண்டவை.
முடக்கத்தான் இலையைத் தேவையான அளவு அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால்  மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். 
 
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்தி வர நாள்பட்ட இருமல்  குணமாகும்.
 
முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.
 
முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி  நீங்கும்.
 
முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டு  வந்தால், வலி, வீக்கம் குறைந்து, நோய் குணமாகும்.
 
முடக்கத்தான் இலையைப் பொடி செய்து, அதனுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், சித்திர மூல வேர்ப்பட்டைப்பொடி, கரிய போளம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சூதக்கட்டு நீங்கும்.