1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:26 IST)

கண்களை சுற்றி கருவளையம் நீக்குவது எப்படி..?

கண்களை சுற்றிலும் வரும் கருவளையம் முகத்தின் அழகை பாதிக்கிறது. சில எளிய வழிமுறைகள் மூலம் கருவளையத்தை நீக்கி முகத்தை அழகாக்கலாம்.
  • கண்களில் கருவளையம் வந்தால் நமக்கு கஷ்டம் வரப்போகிறது என்ற நம்பிக்கை பலருக்கு உள்ளது.
  • செல்போன், டிவி உள்ளிட்டவற்றை அதிகமாக பார்ப்பதால் பலருக்கு கண்களில் கருவளையம் உண்டாகிறது.
  • அதிக மன அழுத்தம், தூக்கமின்மை கூட கண்களில் கருவளையம் உருவாக காரணமாகிறது.
  • குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து கண்களில் வைத்து வைத்து எடுத்தால் கருவளையம் குறைய தொடங்கும்.
  • ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் கருவளையம் ஏற்படுவதை தடுக்கலாம்.
  • ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
  • கருவளையங்கள் உருவாவதை தவிர்க்க நீர்சத்துள்ள ஆரஞ்சு, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.