புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (16:22 IST)

பல வியாதிகள் வராமல் தடுக்கும் தேன் !!

உடல் செரிமானத்திற்கு மிக சிறந்தது தேன். உடல் பருமனை குறைக்க தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் தினமும் உண்பதால் என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம்.


உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிறந்த மருந்தாக தேன் இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் தேனை சாப்பிடுவதால் உடலில் பல வியாதிகள் வராமல் தடுக்கலாம். தேன் சாப்பிட்டால் இதைய நோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் தேன் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிட்டால் அதிக நன்மை உண்டாகும். வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம். பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

உதடு கருமை நிறமாக இருந்தால் தேன் சிறிதளவு எடுத்து தினமும் மூன்று முறை தடவி வர சிவப்பாக மாறி விடும். தினமும் காலையில் ஒரு ஸ்பூன்ஃபுல் தேன் சாப்பிடுவதன் மூலம் உட்புற காயங்களை குணமாக்குகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்தும். வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. இது செலியாக் நோய், பெருங்குடல் அழற்சி, கிரோன் நோய், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நோய்களையும் தடுக்கிறது.

தேனில் உள்ள குளுக்கோஸ் உள்ளடக்கம் சோர்விலிருந்து விடுபடவும், நாள் முழுவதும் ஆற்றல் உயர்த்தவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேன் உங்கள் உடலை வீக்கம் மற்றும் ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது.

தேன் ஒரு மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது. இதில் கால்சியம் நிறைந்துள்ளது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.