இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா சர்க்கரை வள்ளி கிழங்கு.....?
சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் எ, பி,சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
நாம் பொதுவாக கேள்விப்பட்ட கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.
மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் உங்கள் கரு வளர்ச்சிக்கு மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது. எனவே கருத்தரிக்க விரும்புவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கினை கொடுத்து வாருங்கள் உறவுகளே.
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.