புதன், 6 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அற்புத பலன்கள் தரும் அகத்திக் கீரை...!

அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
 
உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து  விடுபடலாம்.
 
தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும்  உடலில் உள்ள பித்தம் குறையும்.
 
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர்  தடையில்லாமல் போகும்.
அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும்.
 
அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.