வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவகுணம் நிறைந்த பவளமல்லி...!!

சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய்  நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள பொருட்கள் மர்றும் மூலிகைகளை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத நம்முடைய முன்னோரின் மருத்துவத்தை பின்பற்றி வாழ்ந்தால் நோயற்ற வாழ்வை நாம் வாழலாம்.
 
பவளமல்லிகையின் கசாயம் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் அகற்றலாம். உங்கள் உடலில் வியர்வை, சிறுநீர் மற்றும் பித்தங்களை பெருக்கி வெளியேற உதவுகிறது. 
 
உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசரப்பான  இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை   கொண்டது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
 
காய்ச்சலை தணிக்க: தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், பனங்கற்கண்டு, இஞ்சி. பவளமல்லி இலைகள் 5 எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும்.  தனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால்   சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும்.
 
பவளமல்லி தேநீர் தயாரிக்க: பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது.