ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (10:16 IST)

இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டதா பிஸ்தா...?

Pista
பிஸ்தாவில் நல்ல ஆரோக்கியத்தை வழங்கக் கூடியது. பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.


வைட்டமின் பி6, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பிஸ்தாவில் அதிகமாக உள்ள வைட்டமின் ஈ, தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அதன் பொலிவைக் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தாவில் சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து, தெளிவான பார்வைக்கு வழிவகுக்கின்றன. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக் கதிர்களால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதிலும், இதயநோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பிஸ்தா பருப்பு, வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளை அதிகப்படுத்தி, ரத்த நாளங்களைப் பாதுகாக்கிறது. இதயநோய் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.

பிஸ்தா சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும்.