எலும்புகள் வலுவிழப்பதற்கான காரணங்கள் என்ன தெரியுமா...?
உடல் பருமன் பல வித உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்தும். இந்த ஆபத்துகளில் ஒன்று தான் எலும்புகளுக்கு ஏற்படும் ஆபத்து. உடலில் உள்ள அதிகமான எடை கால்களின் மீது தான் தாங்கி நிற்கும். இதனால் மூட்டுக்களில் பாதிப்பு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழக்கும்.
எலும்புகளில் ஏதாவது பிரச்சனை என்றால் எழுந்திருக்கும் போதோ அல்லது நடக்கும் போது ஒரு வித வலியை ஏற்படுத்தும். அவை கால்சியம் குறைபாடு உள்ளது என அர்த்தமாகும்.
தைராய்டு கோளாறுக்காக நாம் உண்ணும் மருந்துகளின் பக்க விளைவை ஏற்படுத்தும். எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்து விடும். அதனால் தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டால், 5 மணி நேரத்திற்கு பிறகு கால்சியம் மாத்திரையையும் சாப்பிடுவது நல்லது.
உப்பு அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், அதனை குறைத்திடுங்கள். இல்லையென்றால் எலும்புகள் வலுவிழக்கும்.
அன்றாட உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வதால் எலும்புகளை காத்திடலாம். கால்சியம் கலந்த மாத்திரை மருந்துகளை விட இவை சிறப்பாக செயல்படும்.