1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எந்த கீரை சாப்பிட்டால் என்ன பயன்கள் தெரியுமா....?

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன.

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது.
 
பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
 
பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
 
சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
 
வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
 
முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
 
வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
 
முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
 
புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
 
முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
 
முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
 
பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
 
புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
 
மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.