ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (11:15 IST)

மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பேரிச்சம்பழம் !!

இயற்கையின் மூலம் கிடைக்கும் சர்க்கரை அதிக அளவில் இந்த பழத்தில் இடம்பெற்றுள்ளன. இரத்த விருத்திக்கு இதைவிடவும் சிறந்த பழம் வேறு இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு சிறப்புடன் திகழ்கிறது.

இரவு படுக்கைக்குப் போகும் முன்னால் நான்கு ஐந்து பழங்களை சாப்பிட்டுவிட்டு பசும் பாலையும் பருகி வந்தால் நல்ல தாது விருத்தி பெற்று சிறக்கலாம்.
 
காச நோய் உள்ளவர்களும் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு பழங்கள் வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
 
நல்ல ஆண்மையுடன் திகழவும் இப்பழம் பெரிதும் உதவுகிறது. பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறிது சிறிதாக சர்க்கரையின் அளவு குறையும். இதைப்போல பேரீச்சம்பழமும் மலச்சிக்கலை போக்கிடும் தன்மை கொண்டதாகும்.
 
இந்த பழத்தை கொட்டை நீக்கி பாலில் வேகவைத்து அதனுடன் பசு வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான இதய நோய்கள் குணமாகும். மூளைக் கோளாறு உள்ளவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும்.
 
கொஞ்சம் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு அதனுடன் ஒரு கோப்பை பசும் பாலையும் பருகினால் நல்ல நினைவாற்றலை பெறலாம்.